ஈரோடு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மக்கள் சாரைசாரையாக வந்து ஓட்டு போட்டனர். மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அறையின் பாதுகாப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த பின்னரே அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அறைக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.