பருத்திக்கு நல்லவிலை கிடைக்காததால் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்


பருத்திக்கு நல்லவிலை கிடைக்காததால் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
x

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்திக்கு நல்லவிலை கிடைக்காததால் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்திக்கு நல்லவிலை கிடைக்காததால் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி ஆகிய 4 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமும் மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் பருத்தி மூட்டைகள் மறைமுக ஏல நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் விவசாயிகளிடமிருந்து பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர்.

ஏலத்தில் பங்கேற்வில்லை

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி குத்தாலம் மற்றும் திருப்பனந்தாளில் வியாபாரிகள், விவசாயிகள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் பருத்தியை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

இதை தொடர்ந்து நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டு பருத்தி மறைமுக ஏலம் மீண்டும் தொடங்கியது. செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் மாலை பருத்தி ஏலம் நடந்தது.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்

இந்த ஏலத்தில் ஆந்திர மாநிலம், தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி, சேலம், விழுப்பரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மில் அதிபர்களும், வியாபாரிகளும் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக ஒருகுவிண்டால் பருத்தி ரூ.9,889-க்கும், குறைந்த பட்சமாக ரூ.6,365-க்கும், சராசரியாக ரூ.8,750-க்கு விலைபோனது. கடந்த வாரங்களில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.12,000-க்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் தற்போது குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது என அதிகாரிகளிடம், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

பின்னர் விவசாயிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் காலங்களில் பருத்திக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பருத்தி ஏலத்தின் போது நல்லவிலை கிடைக்கவில்லை என அதிகாரிகளிடம், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story