விவசாயிகள், வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்


விவசாயிகள், வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்
x

விவசாயிகள், வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூரில் உள்ள வேளாண்மை விற்பனை கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயலாளர் சு.கண்ணன் தலைமை தாங்கினார். விற்பனை கூட கண்காணிப்பாளர் திருமகள் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி.பச்சையப்பன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில்விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், புளி, கொள்ளு, மணிலா உள்ளிட்ட பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவந்து வி்ற்பனை செய்து அதற்கான விலையை பெற்று பயனடையலாம். மார்க்கெட் நிலையை அறிந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படும். உடனடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும். பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால் குளிரூட்ப்பட்டு மையத்தில் வைத்து விலை வரும் போது விற்பனை செய்யலாம், விவசாய பொருட்களை வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் வேளாண்மை அலுவலர்கள் லதா, ராஜேஷ், உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன், ராமமூர்த்தி, உள்பட பலர் பேசினார்கள். முடிவில் ஜோதிராமன் நன்றி கூறினார்.


Next Story