பருத்தி ஏலத்திற்கு வந்த விவசாயிகள் திடீர் சாலைமறியல்

பருத்தி ஏலத்திற்கு வந்த விவசாயிகள் திடீர் சாலைமறியல்
x

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், மழையால் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு கூடுதல் எடை கழிவு செய்திட எதிர்ப்பு தெரிவித்து, பருத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம்

எடப்பாடி:-

பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று இப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்ததால், பருத்தி ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்த பருத்தி மூட்டைகளில் பெரும்பாலானவை தொடர் மழையால் நனைந்தன.

இதையடுத்து மீண்டும் நேற்று காலை இந்த மையத்தில் பருத்தி ஏலம் தொடங்கியது. அப்போது அங்கு வந்த அதிகாரிகள் மழையால் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு தலா 2 கிலோ எடை கழிவு செய்வதாக தெரிவித்தனர்.

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், மழையால் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு கூடுதல் எடை கழிவு செய்திட எதிர்ப்பு தெரிவித்து, பருத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகளின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பருத்தி விவசாயிகள் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் எடை கழிவினை குறைவு செய்த நிலையில் மீண்டும் பருத்தி ஏலம் நடைபெற்றது. பிரதான சாலையில் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story