கவர்னர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு..!
கவர்னர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
டிஸ்கசனரி பண்ட் தொடர்பாக சட்டசபையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
கவர்னர் மாளிகைக்கான ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் தொடர்பாக தகவல் வந்ததால் ஆய்வு செய்தோம். சிஏஜி விதிகளை மீறி அட்சயபாத்திரம் திட்டத்திற்கு நிதி கையாளப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில் ரூ.4 கோடியை அட்சயப் பாத்திர திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2019-20ல் இரு தவணையாக அட்சயப் பாத்திரம் திட்டத்திற்கு வழங்கியுள்ளனர். எஞ்சிய ஒரு கோடி ரூபாயை ஆளுநர் மாளிகை கணக்கில் எங்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் வழங்கியுள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதியை சிஏஜி விதிமுறைகளை மீறி கையாண்டுள்ளனர்; ரூ.5 கோடியை மறைமுக கணக்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அரசின் கஜானாவிலிருந்து நேரடியாக செல்லாமல் தனியாக ஒரு கணக்கில் பணத்தை எடுத்து வைப்பது தவறு. தனியார் தொண்டு நிறுவனத்தால் அட்சய பாத்திரம் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் திட்டத்திற்கான நிதி குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறினார்.