சேலத்தில் ஜவுளி குடோனில் தீ விபத்து துணி, நூல் பண்டல்கள் எரிந்து நாசம்


சேலத்தில்  ஜவுளி குடோனில் தீ விபத்து  துணி, நூல் பண்டல்கள் எரிந்து நாசம்
x

சேலத்தில் ஜவுளி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த துணி, நூல் பண்டல்கள் எரிந்து நாசமாகின.

சேலம்

சேலம்,

ஜவுளி நிறுவனம்

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 56). இவர் அந்த பகுதியில் ஜவுளி உற்பத்தி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அங்கு காட்டன் சட்டைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிகள் உற்பத்தி செய்வதற்கான துணிகள் தயாரித்து அதை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் விற்பனை செய்து வருகிறார்.

உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களை அருகில் உள்ள ஒரு குடோனில் அடுக்கி வைத்து உள்ளார். நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து ஆட்கள் குடோனை பூட்டி விட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு குடோனில் இருந்து கரும்பு புகை வந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள், சுந்தரத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயில் எரிந்து நாசம்

அதன்பேரில் அவர் குடோனுக்கு சென்று பார்த்தார். அப்போது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்து ஜவுளி பொருட்கள், நூல் பண்டல்கள் தீயில் எரிந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீய்ச்சியடித்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் ஜவுளி பொருட்கள், நூல் பண்டல்கள் எரிந்து நாசமாகின. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது, இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் மற்றும் நூல் பண்டல்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறினர்.


Next Story