குழந்தைகள் மைய அலுவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி


குழந்தைகள் மைய அலுவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

குழந்தைகள் மைய அலுவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி தாலுகாவில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 5 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு சமாளிக்க வேண்டும், மேலும் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. தீயணைப்பு கருவிகளை தங்கள் அலுவலகங்களில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அவசர காலங்களில் எவ்வாறு தங்களையும், உடன் இருப்பவர்களும் காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு கருவிகளை கையாளுவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் 30 பேர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் நல அலுவலரும் போக்சோ நோடல் அதிகாரியுமான சுசிலா செய்திருந்தார்.


Next Story