2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்


2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு   மருத்துவ காப்பீடு அட்டை கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,40,000 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,40,000 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

காப்பீடு திட்ட அடையாள அட்டை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின்போது மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனடைந்த 9 பயனாளிகளுக்கு நினைவுப் பரிசுகள், சிறப்பாக செயல்பட்ட 2 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் 4 தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவற்றை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 5 வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணம் இன்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இதேபோல் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த இரு திட்டத்தையும் இணைத்து ஒரு குடும்பம் 5 வருடத்திற்கு ரூ.10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. விவசாயிகள், ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிறிய சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளை நாடும்போது முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டையினை வழங்கி கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.

பயன்பெற வேண்டும்

நமது மாவட்டத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் ஏற்படுத்தி வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ராஜஷ், டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story