மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
x

தேனியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 5-ந்தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். மனு கொடுக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் 4 புகைப்படங்களுடன் நேரில் அல்லது பாதுகாவலர் மூலமாக கொடுக்கலாம். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story