வனக்குழு செயற்குழு கூட்டம்


வனக்குழு செயற்குழு கூட்டம்
x

வங்காரம் கிராமத்தில் வனக்குழு செயற்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வங்காரம் கிராமத்தில் வனக்குழு செயற்குழு கூட்டம் நடந்தது.

யை அடுத்த வங்காரம் கிராமத்தில் கிராம வனக்குழு செயற்குழு கூட்டம் அதன் தலைவர் வங்கை சு.அகிலன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகரன் மற்றும் துணைத் தலைவர் உமா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி சரக வனவர் ஹேமமாலினி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு வனச்சரக அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு வன விலங்குகளை பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றும், காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது நமது கடமை என்றும் வலியுறுத்தினார்.

பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கவும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சுய தொழில் தொடங்க தனிநபர் கடன் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராமன், சரிதா, உமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story