வனத்துறை ஊழியர்கள் ஆய்வுக்கூட்டம்


வனத்துறை ஊழியர்கள் ஆய்வுக்கூட்டம்
x

வனத்துறை ஊழியர்கள் ஆய்வுக்கூட்டம்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையில், வனத்துறையினர் ரோந்து செல்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அம்பை, கடையம், பாபநாசம், முண்டந்துறை உள்ளிட்ட வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

வனத்துறை ஊழியர்கள் தங்களது தேவைகள் மற்றும் பணிகள் குறித்து துணை இயக்குனரிடம் கலந்துரையாடினர். தொடர்ந்து முண்டந்துறை வனச்சரக வனத்துறையினர் அதிக தூரம் ரோந்து சென்று சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு கோப்பையை வனத்துறை துணை இயக்குனர் வழங்கினார்.

அம்பை கோட்டத்திற்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் 75 பேர் மற்றும் களக்காடு கோட்டத்திற்குட்பட்ட 45 காவலர்கள் என 120 பேருக்கு மழை கோட் மற்றும் பைகள் வழங்கப்பட்டன.


Next Story