400 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டம்


400 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டம்
x

காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு 400 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு 400 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

உணவுத்துறை செயலாளர்

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-திருச்சி, தஞ்சாவூர், திருவாருர், நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதியில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு குறுவை 66 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 72 ஆயிரத்து 816 எக்டராக உயர்ந்துள்ளது. இதே போல் கடந்தாண்டு, 387 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டன.

400 கொள்முதல் நிலையங்கள்

காவிரி டெல்டா பகுதியில் இந்த ஆண்டு 400 கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யும் பகுதிகளில், தற்காலிக கொள்முதல் நிலையம் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மழைக்காலம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் 109 இடங்களில் 10 லட்சம் தார்பாய்கள் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் 20 இடங்களில், 2.86 லட்சம் டன் நெல், அரிசி போன்ற பொருட்களை வைக்க குடோன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வருகிற அக்டோபர் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

கூடுதல் கடன்

தஞ்சாவூரில் 81 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் 1- வார்டுக்கு 1- ரேசன் கடை திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தஞ்சாவூர் ஒட்டுமொத்த பகுதியில் பயிர்கடனாக, ரூ.10 ஆயிரத்து 292 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதை விட சற்று கூடுதலாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது அவருடன் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வங்கி மேலாண் இயக்குனர் பெரியசாமி, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் பழனீஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஜெகத்ரட்சகன், கும்பகோணம் துணைப்பதிவாளர் அட்சயப்பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story