கருங்குளம் யூனியனில் 108 பெண் பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள்


கருங்குளம் யூனியனில் 108 பெண் பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள்
x

கருங்குளம் யூனியனில் 108 பெண் பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகளை சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜன் தலைமை தாங்கினார்.

கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கியலீலா, கருங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதனைத் தொடர்ந்து கருங்குளம் ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பயனாளிகள் 108 பேருக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் மொத்தம் 540 வெள்ளாடுகளை பயனாளிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ, வல்லநாடு கால்நடை மருத்துவ மனையில் அடிப்படைதேவைகள் குறித்து ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம ்விளக்கங்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், மருத்துவர்கள் அங்கப்பன், ஸ்ரீராம், சூர்யா, ஆர்த்தி, மாவட்ட சிறுபான்மையினர் அமைப்பு துணை செயலாளர் கலீலுர் ரஹ்மான், கருங்குளம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் இசக்கி, பஞ்சாயத்து தலைவர்கள் பேபி சங்கர், சந்திரா முருகன் மற்றும் கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்காநாயக்கன்பட்டி பஞ்சாயத்து புளியம்பட்டி கிராமத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டி வேலையை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி, யூனியன் உதவி பொறியாளர் ரவி, புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், புளியம்பட்டி பங்குத்தந்தை பிரான்சிஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலப்பைபட்டி பஞ்சாயத்து வேப்பங்குளம் கிராமத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டும் பணியை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.


Next Story