விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

நொய்யல்,

நொய்யல் அருகே மரவாபாளையம் அருகே நாடார்புரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு யாக பூைஜகள் நடந்தது.தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் செல்வ விநாயகர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீைர ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story