முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை


முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
x

முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர்

கரூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் 115-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கரூர்-கோவை சாலையில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நீலகண்டன் மற்றும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் தேக்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதேபோன்று தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர்கள் கோல்ட் ஸ்பாட் ராஜா, அன்பரசன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தோகைமலை பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மேடையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை விழா தோகைமலை தேவர் பேரவை சார்பில் அந்த அமைப்பின் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கல், இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் செய்த சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story