வீடு தேடி சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


வீடு தேடி சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 6 Jan 2023 6:45 PM GMT (Updated: 6 Jan 2023 6:45 PM GMT)

கம்பத்தில் வீடு தேடி சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா 3 சக்கர ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், செயற்கை கால், கைகள், காது கேட்கும் கருவி, இலவச பஸ் பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் மாற்றுத்திறனாளிளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை அவர்களுக்கு அந்தந்த ஊரிலே வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில், கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த முனியாண்டி (வயது 64), காளவாசல் தெருவைச் சேர்ந்த சாந்திஸ்வரன் (65) ஆகிய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளை வீடு தேடி சென்று வழங்கினர். அப்ேபாது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கருப்பையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story