அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

ஓய்வு பெறும் நாள் அன்றே ஓய்வுகால பலன்களை வழங்கவேண்டும், ஓய்வுபெற்றோரின் 79 மாத டி.ஏ. நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். மகளிர் இலவச பயணத்துக்கு சிறப்பு பேட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புறநகர் கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story