மெரினா கடற்கரையில் அனாதையாக கிடந்த கைத்துப்பாக்கி -போலீசார் விசாரணை
மெரினா கடற்கரையில் அனாதையாக கிடந்த கைத்துப்பாக்கி போலீசார் கைப்பற்றி விசாரணை.
சென்னை,
சென்னை நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் மெரினா கடற்கரை மணல் பரப்பில், கலங்கரை விளக்கம் பின்புறம் நேற்று காலை நடந்து சென்றுள்ளார். அப்போது, கடற்கரை மணல் பரப்பில் கைத்துப்பாக்கி ஒன்று அனாதையாக கிடந்துள்ளது. அவர் அந்த துப்பாக்கியை எடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர், அந்த துப்பாக்கி மெரினா காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. அதில் குண்டுகள் எதுவும் இல்லை. மெரினா போலீசார் அந்த துப்பாக்கியின் உரிமையாளர் யார்?, மெரினா கடற்கரைக்கு எப்படி வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story