புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி


புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி
x

சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் மாலையில் திருப்பலி, புனிதரின் நவநாள் மன்றாட்டு, மறையுரை, நற்கருணை ஆசீர், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் தேரடி திருப்பலி நடந்தது. காலையில் பாளையங்கோட்டை முதன்மை குரு குழந்தைராஜ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. சரணாலயம் இயக்குனர் ஞானதினகரன் மறையுரையாற்றினார். கோட்டார் மறைமாவட்ட கிளாசின், குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கினார்.

தொடர்ந்து புனிதரின் தேர் பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேர்கள் அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. புனிதருக்கு வீடுகள்தோறும் காணிக்கைகள் வழங்கியும், விழாவிற்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இரவில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் சேரன்மாதேவி மரியபிரான்சிஸ், பண்டாரகுளம் அருள்மிக்கேல், பாளையங்கோட்டை ஆயர் இல்லம் ஜார்ஜ், திருச்சி எட்வின் ஆரோக்கியநாதன், மேல இலந்தைகுளம் ஜெயபாலன், தாளார்குளம் ஜேக்கப், அம்பை அருள் அந்தோணி, வெய்க்காலிப்பட்டி சகாயஜான், மண்ணின் மைந்தர்களான அருட்தந்தையர்கள் ஜேம்ஸ், சார்லஸ், டேனியல், மகேஷ், சவரிராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிங்கம்பாறை ஊர் தலைவர் பிரகாசம், செயலாளர் வில்சன், பொருளாளர் பவுல் ஜெபஸ்தியான் மற்றும் இறைமக்கள் செய்து இருந்தனர்.


Next Story