முறைகேடாக குடிநீர் இணைப்பு: கம்பம் நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்


முறைகேடாக குடிநீர் இணைப்பு:  கம்பம் நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்
x

முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கிய கம்பம் நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

தேனி

கம்பம் நாட்டுக்கல் பகுதியை சேர்ந்த சிலர், நகராட்சி ஆணையாளர் பாலமுருகனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் பல வீடுகளில் நகராட்சி அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் விசாரணை நடத்தினார்.

அப்போது பொறியியல் பிரிவில் அனுமதி பெறாமல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதாக பொறியியல் பிரிவில், குடிநீர் வழங்கல் துறை ஊழியர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆணையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது, ஆவணங்கள் முறைகேடு தொடர்பாக வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் பணியாற்றிய காலங்களில் நடைபெற்ற பணிகள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


Next Story