விபத்தில் வாலிபர் படுகாயம்


விபத்தில் வாலிபர் படுகாயம்
x

சிவகிரியில் விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் (வயது 29). இவர் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், கார்த்திக் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து, மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தை தேடி வருகிறார்.



Next Story