சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


சிதம்பரத்தில்  கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கடந்த 3.8.2022 அன்று சிதம்பரம்- வண்டிக்கேட் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபத்தின் பின்புறம், குஞ்சிதமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் விமல் என்கிற விமல்ராஜ் (வயது 23) என்பவர் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா வியாபாரியான இவர் மீது சிதம்பரம் நகர போலீசில் 2 கஞ்சா வழக்குகள், வழிப்பறி வழக்கு, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு உள்ளது. இதையடுத்து இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் விமல்ராஜை சிதம்பரம் நகர போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.


Next Story