கரூரில், விழிப்புணர்வு ஊர்வலம்


கரூரில், விழிப்புணர்வு ஊர்வலம்
x

கரூரில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்

கரூரில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். ஊர்வலம் திண்ணப்பாகார்னர், பஸ் நிலையம், ஜவகர் கடைவீதி வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தில் சென்று நிறைவடைந்தது. முன்னதாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுடன் கலெக்டர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டார்.

தொடர்ந்து தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசிற்கான காசோலையினையும், மேலும். ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுயவுதவிக்குழுக்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார். இந்தநிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story