சேலத்தில், ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
சூரமங்கலம்:
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையம் முன்பு சதர்ன் ெரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் ஜெனரல் கிளை செயலாளர் நெடுஞ்செழியன், ஓபன் லைன் கிளை செயலாளர் ரமேஷ் பாபு, தலைமை கிளை செயலாளர் ஜெகன், கோட்ட உதவி செயலாளர்கள் சியாம் சுந்தர், என்ஜினீயரிங் கவுன்சில் சேர்மன் முத்து சுப்பிரமணி, லோகோ தொழிலாளர் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story