இடைத்தேர்தலில் ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர்


இடைத்தேர்தலில்  ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர்
x

கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு இடைத்தேர்தலில் ஒரு வாக்கு கூட ஒரு வேட்பாளர் பெறவில்ைல.

மதுரை

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவிலாங்குளம் ஊராட்சியில் 6-வது வார்டுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். இந்த போட்டியாளர்களில் வளர்மதி என்பவர் 3-வது வார்டில் இருந்து 6-வது வார்டுக்கு போட்டியிட்டு உள்ளார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வளர்மதி என்ற வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை. வேட்பு மனுவின் போது முன்மொழிவு செய்த நபர் கூட வாக்களிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. மேலும் இவரது கணவர் ஜெயக்கொடி என்பவர் 3-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.


Related Tags :
Next Story