உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக டி.ஐ.ஜி. மரக்கன்று நடவு


உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக டி.ஐ.ஜி. மரக்கன்று நடவு
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக டி.ஐ.ஜி. மரக்கன்று நடவு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார். அவர் ஊரக உட்கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டினார். ஆய்வின் போது, தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story