தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சார்பில் நேற்று மாலை பீச் ரோடு ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்க தலைவர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்க கார்த்திகேயன், கிளை செயலாளர் சைமன் மேத்யூ ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும், வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை மிண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி நகர வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story