இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு


இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு
x

சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் வட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 17-வது மாநாடு சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சிவகுமார், ஒன்றிய தலைவர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் முரளி, ஒன்றிய பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட தலைவர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும், சங்கராபுரத்தில் மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story