உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை


உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  அதிரடி சோதனை
x

காரைக்குடி பகுதியில் உணவுபாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் உணவுபாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி சோதனை

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி உத்தரவின்பேரில் காரைக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

காரைக்குடி வட்டாறு டேங்க் பகுதி, பெரியார்சிலை, கோவிந்தராஜலு, திருச்சி சாலை, கோட்டையூர் ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல் நாள் ஆய்வின் போது அனுமதியின்றி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 7 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

அபராதம்

இதேபோல் நேற்று நடைபெற்ற ஆய்வின் போது அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததை கண்டறியப்பட்டு 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு கடைக்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story