குறுவை தொகுப்பு திட்ட பணிகள் குறித்து விதைச்சான்று அதிகாரி ஆய்வு


குறுவை தொகுப்பு திட்ட பணிகள் குறித்து  விதைச்சான்று அதிகாரி ஆய்வு
x

குறுவை தொகுப்பு திட்ட பணிகள் குறித்து விதைச்சான்று அதிகாரி ஆய்வு நடத்தினார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட பகுதிகளில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று பணிகள், குறுவை தொகுப்பு திட்ட பணிகள், குறுவை பயிர் சாகுபடி பரப்பு சாதனை விவரங்கள் குறித்து சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அகண்டாரா, விதை ஆய்வு இணை இயக்குனர் மல்லிகா, மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுதா, பண்ணை மேலாளர் குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story