கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு


கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
x

கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

குத்தாலத்தில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் உள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது. அயோடின் உப்பு இல்லாத உப்பு பாக்கெட்டுகளை கண்டறிந்து அழித்தனர். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமாரசுவாமி, சந்திரசேகரன், முருகேசன், முரளி, பிரித்திவிராஜ், முருகன், செல்வ விக்னேஷ், சீலன், கணேஷ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story