பன்னாட்டு கருத்தரங்கு


பன்னாட்டு கருத்தரங்கு
x

தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.

தேனி

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், நுண்ணறிவு டேட்டா மற்றும் டேட்டா அறிவியல் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் உமா வரவேற்றார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி செயலாளர் காசிபிரபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். சிங்கப்பூரை சேர்ந்த தரவு பகுப்பாய்வு மையத்தின் தரவு ஆய்வாளர் டேபோரா சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். முடிவில் உதவி பேராசிரியை அம்பிகாதேவி நன்றி கூறினார்.


Next Story