விழுப்புரத்தில் அம்மன் கோவிலில் நகை திருட்டு


விழுப்புரத்தில்  அம்மன் கோவிலில் நகை திருட்டு
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அம்மன் கோவிலில் நகை திருடு போனது.

விழுப்புரம்


விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் வைகுண்ட வாசபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் கோவிலில் இருந்த கேமராக்களை சேதப்படுத்தி சென்றுவிட்டனர்.

இதேபோல் சீத்தாராம் சந்துவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் தங்க தாலி செயினையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். மேலும், சென்னை நெடுஞ்சாலை முத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் மர்ம நபர்கள் திருட முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story