கமல்ஹாசன் நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்


கமல்ஹாசன் நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2022 8:58 AM IST (Updated: 24 Nov 2022 10:38 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மநீம தலைவர் கமல்ஹாசன் நலமாக உள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story