ரெயிலில் கஞ்சா கடத்திய கர்நாடக வாலிபர் கைது


ரெயிலில் கஞ்சா கடத்திய கர்நாடக வாலிபர் கைது
x

காட்பாடி வழியாக ரெயிலில் கஞ்சா கடத்திய கர்நாடக வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

காட்பாடி வழியாக ரெயிலில் கஞ்சா கடத்திய கர்நாடக வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

ரெயிலில் கஞ்சா கடத்தல்

காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தனிப்பிரிவு போலீசார் முத்துவேல், நரேந்திரகுமார், அருண்குமார், சதானந்தம் ஆகியோர் காட்பாடி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து பெங்களூரு வரை செல்லும் ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் 4-வது நடைமேடைக்கு வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை செய்தனர்.

கர்நாடக வாலிபர் கைது

அப்போது பொதுப்பெட்டி ஒன்றில் பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் ஒரு பையில் கஞ்சா பண்டல்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த பை அதே பெட்டியில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 28) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி கிருஷ்ணராஜபுரத்துக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மகேஷை கைது செய்தனர்.


Next Story