கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம்


கொடியாலத்தூர் ஊராட்சியில்  புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 3:01 PM IST)
t-max-icont-min-icon

கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் ரேவதி அய்யப்பன் வரவேற்றார். ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.அப்போது கலெக்டர் கூறுகையில், கொடியாலத்தூர் நேரடி கொள்முதல் நிலையத்தின் ஆதமங்கலம், பாங்கல், கொளப்பாடு ஊராட்சிகளை சேர்ந்த 725 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். பருவ‌ மழை பாதிப்பினை கருத்தில் கொண்டு அறுவடை செய்து கொண்டு வரும் நெல் மூட்டைகளை விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இதில் வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், ஆத்மாகுழு உறுப்பினர் பழனியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரவீனா ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், தியாகராஜன் ஒன்றிய பொறியாளர்கள் ரவிச்சந்திரன் பாலச்சந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story