நசியனூர் ஓலப்பாளையம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; வருகிற 3-ந் தேதி நடக்கிறது


நசியனூர் ஓலப்பாளையம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; வருகிற 3-ந் தேதி நடக்கிறது
x

நசியனூர் ஓலப்பாளையம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; வருகிற 3-ந் தேதி நடக்கிறது

ஈரோடு

பெருந்துறை அருகே உள்ள நசியனூர் ஓலப்பாளையத்தில் பழமையான பொன் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், கருப்பண்ணசாமிக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது.

இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா, வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணி முதல் 9.15 மணிக்குள் நடக்கிறது.

இதையொட்டி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4.30 மணி அளவில் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

இரவு 8.30 மணி வரை முதல் கால யாக பூஜையும், 2-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை 2-ம் கால யாக பூஜையும், இரவு 8.30 மணி வரை 3-ம் கால பூஜையும், 3-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.

தொடர்ந்து 3-ந் தேதி காலை 8.45 மணிக்கு பொன்காளியம்மன் கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி 3-ந் தேதி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விழா குழுவினரான கூறை குலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


Next Story