காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆலம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒட்டுடைய அய்யனார், ஒட்டுடைய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் முடிந்து கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருவறையில் சாமி- அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், குலதெய்வக்காரர்கள், ஆலம்பாடி கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story