கோவில்பட்டி பகுதி கோவில்களில் கும்பாபிஷேக விழா


கோவில்பட்டி பகுதி கோவில்களில் கும்பாபிஷேக விழா
x

கோவில்பட்டி பகுதி கோவில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இந்திராநகர் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதேபோன்று வில்லிசேரி சாய்பாபா கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஜமீன் தேவர்குளத்தில் ஜலசக்தி செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது. வெயிலுகந்தபுரம் இந்து கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கண்ணபிரான் கோவில் 4-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது‌.

நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி களில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story