பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 4½ ஆண்டுகள் சிறை
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 4½ ஆண்டுகள் சிறை
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன் என்கிற ஈஸ்வரமூர்த்தி(வயது 45). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தனிமையில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் ஈஸ்வரமூர்த்தி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
4½ ஆண்டுகள் சிறை
இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் குற்றவியல் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், ஈஸ்வரமூர்த்திக்கு 4½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அதனை தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். .