திறப்பதற்கு முன்பே குடிநீர் தொட்டியில் கசிவு


திறப்பதற்கு முன்பே குடிநீர் தொட்டியில் கசிவு
x

திறப்பதற்கு முன்பே குடிநீர் தொட்டியில் கசிவு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்பு, அகழி சீரமைப்பு, குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி பகுதியில் புதிதாக 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. விரைவில் இந்த குடிநீர் தொட்டிகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்குவாசல் 7-வது வார்டு பகுதியில் புதிதாக ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டி கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு சோதனை செய்த போது தொட்டியின் பல்வேறு இடங்களிலிருந்து நீர்க்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story