மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை


மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வெட்டிக்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு. ஆயர்தர்மம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்தையா(வயது 62). இவரது மனைவி மாரியம்மாள்(58). இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முத்தையா குடித்து விட்டு அடிக்கடி மனைவி மாரியம்மாளுடன் தகராறு செய்து வந்தார். இதனால் மகன்கள் முத்தையாவுடன் பேசுவதை தவிர்த்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28.06.21-ல் அதிகாலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்தையா, உன்னால் தான் மகன்கள் என்னிடம் பேசவில்லை என கூறி மாரியம்மாளை அரிவாளால் வெட்டினார். இதில் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தையாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) பூர்ண ஜெயஆனந்த், மனைவியை கொன்ற விவசாயி முத்தையாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Next Story