சாராய வியாபாரிகள் கைது
சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு
2 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியில் சாராய வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டை நடத்த உத்தரவிட்டார் அதன்படி கிராமிய போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மற்றும் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
பீமாரபட்டி கிராமத்தில் அதே ஊரை சேர்ந்த பழனி (வயது 59) என்பவர் அங்குள்ள ஓடை ஒன்றில் சாராயம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதே போல மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (52) என்பவர் ஆத்தனுர் ஓடை பகுதியில் சாராய வியாபாரம் செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story