காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் சாராயம் பறிமுதல்


காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் சாராயம் பறிமுதல்
x

திட்டச்சேரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி,ஜூலை.4-

திட்டச்சேரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

வாகன சோதனை

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தி செல்வதை தடுக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

ரூ.1 லட்சம் சாராயம்

இந்த சோதனையில் காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாபு (வயது 30), பொறையாறு காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பழனிவேல் (40) என்பதும், இவர்கள் 2 பேரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, பழனிவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story