காரைக்கால் மதுபானம் விற்றவர் கைது


காரைக்கால் மதுபானம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:14+05:30)

கீழ்வேளூரில் டாஸ்மாக் கடை அருகே காரைக்கால் மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வெளி மாநில மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக நாகை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவனுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவரது தலைமையில் தனிப்படையினர் நேற்று கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கீழ்வேளூர்- ஒர்குடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக புதுச்சேரி மாநில மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காரைக்கால் மாவட்டம் திரு. பட்டினம் முதலைமேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 48) என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 107 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story