கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை


கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
x

கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

மயிலாடுதுறை

மணல்மேடு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் இறங்க கூடாது என மாவட்ட கலெக்டர் லலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி மதிவாணன் மேற்பார்வையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.


Next Story