மதுரை மல்லிகை கிலோ ரூ.500-க்கு விற்பனை


மதுரை மல்லிகை கிலோ ரூ.500-க்கு விற்பனை
x

மதுரை மல்லிகை கிலோ ரூ.500-க்கு விற்பனையானது.

மதுரை


மதுரை மல்லிகைக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. பண்டிகை, விழாக்காலங்களில் மல்லிகைப்பூவின் விலை உச்சத்தை தொடும். ஆனால், கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் விலை கடும் சரிவாக இருந்து வந்தது. இதனால் அதிக அளவில் பூக்கள் செண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், நேற்று ஆடி அமாவாசையையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.500க்கு விற்பனையானது. அதுபோல், சம்பங்கி ரூ.150, பிச்சி ரூ.400, முல்லை ரூ.400, பட்டன்ரோஸ் ரூ.120, செண்டு பூ ரூ.100, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.200 என விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு மதுரை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக டன் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன.. தற்போது, மதுரை மார்க்கெட்டுக்கு அதிக அளவில் பூக்கள் வருகின்றன. இதனால், அதன் விலை கடந்த சில தினங்களாக குறைவாகவே இருக்கிறது.

ஆடி அமாவாசையையொட்டி தற்போது விலை அதிகரிக்க தொடக்கி இருக்கிறது. வரும் நாட்களில் ஆடி வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் பூக்களின் விலை சற்று அதிகமாகும் என எதிர்பார்க்கிேறாம், என்றனர்.


Related Tags :
Next Story