கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டிய பாம்பட்டி கைது


கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டிய பாம்பட்டி கைது
x

ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டிய பாம்பட்டியை வனத்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி காளியம்மன் கோயில் கோடை விழா நடந்தது. கொடை விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் மூலம் நல்ல பாம்பு வித்தையும் காண்பிக்கப்பட்டன. இந்த நல்ல பாம்பு வித்தை செய்வதை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தன.

பாம்பு வைத்து வித்தை காட்டுவது தேசிய விரோத செயல். இதனால் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் கோவில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கோவில் திருவிழா நடந்த எஸ்.குமரபுரம் கிராமத்திற்கு சென்று கோவில் கமிட்டி நிர்வாகிகள் விசாரணை செய்தனர். விசாரணையில் பாம்பு வித்தை காட்டிய மதுரை ஆளவந்தன் பகுதி சார்ந்த சௌந்தர்ராஜன் மகன் ராஜேஷ்குமார்(46) கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் கோவில் திருவிழாக்களில் உடன் கலைநிகழ்ச்சிகளுடன் நல்லபாம்பை பிடித்து வந்து வித்து காட்டிய பிறகு மீண்டும் காட்டுப்பகுதியில் விட்டுவிடுவதாக வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.


Next Story