கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்


கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில்   பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்
x

கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெ.தேன்மொழி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாலு வரவேற்றார். இதில் மாணவர்களின் கற்றல் திறன், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவி ஆர்.தேன்மொழி, கல்வி ஆர்வலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


Next Story