நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம்


நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:39+05:30)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானங்கள் குறித்து பேசினர். இதில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், ஒகேனக்கல் குடிநீரை கிராம மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வீதிகள் மற்றும் சந்திப்பு சாலை, தொடக்க சாலைகளில் மின்விளக்கு வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும். விவசாயிகள் நலன்கருதி தொப்பையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு பிப்ரவரி இறுதியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story